உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோவர்தன் கிரிராஜ் தலத்திற்கு புனித யாத்திரையாக, ராஜஸ்தானின் புதிய முதல்வர் பஜன்லால் ஷர்மா காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையைவிட்டு கார் திடீரென விலகி, கழிவுநீர் வாய்க்காலில் சிக்கி விபத்துக்குள்ளானது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரத்பூரில் இருந்து கோவர்த்தனுக்கு ராஜஸ்தானின் பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா, தனது பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்றார். அப்போது டீக் மாவட்டம் புச்சாரி என்ற இடத்தில் முதல்வரின் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென அப்பகுதியில் இருந்த வடிகாலில் முதல்வர் காரின் சக்கரம் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் முதல்வர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதைத் தொடர்ந்து, அவரது கான்வாய் உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முதல்வரின் வாகனத்தை பத்திரமாக மீட்டனர். அவர்கள் முதல்வர் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பின்னர் மற்றொரு வாகனத்தில் முதல்வர் பஜன்லால் சர்மா கோவர்த்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பஜன்லால் ஷர்மா முதலமைச்சராக பதவியேற்றபின் முதன்முறையாக தனது சொந்த சொந்த ஊரான பரத்பூர் சென்றபோது பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பதவியேற்ற சில நாட்களிலேயே முதல்வர் பஜன்லாலின் கார் விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
+ There are no comments
Add yours