ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழு இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.
அதன்பின்னர், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வரும் 15க்குள் தெரிவிக்கலாம் என்று உயர்மட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் குறித்த சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை அனுப்பும்படி கூறியிருந்தது.
அதன்படி பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அனுப்பிவருகின்றனர். ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு இதுவரை 5,000 ஆலோசனைகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக்குழு கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டக் குழுவை மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை https://onoe.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, se-hlc@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
+ There are no comments
Add yours