கார்த்திகை மாதம் துவங்கி விட்டது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்து சபரிமலை சென்று தரிசித்து வருகின்றனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது.
பக்தர்கள் வருகையை சமாளிக்க தேவசம்போர்டு , கேரள காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலை வருவதுண்டு.
கேரளாவில் 100 வயதை கடந்த ஒரு மூதாட்டி முதன் முறையாக ஐயப்பனை தரிசிக்க சபரிமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கேரளா மாநிலம், வயநாட்டில் உள்ள மூன்னானகுழியைச் சேர்ந்த பாருக்குட்டியம்மா எனும் 101 வயது மூதாட்டி தனது பேரன்களுடன் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்றுள்ளார்.
வயது முதிர்ந்த மூதாட்டி என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அவர்களை அழைத்து 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்க சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. 1923 ஆம் ஆண்டு பிறந்த பாருக்குட்டியம்மா, தனது சிறுவயதில் கோயிலுக்குச் செல்ல ஆசைப்பட்டதாகவும், அது நடக்கவில்லை என்றும், அதன்பிறகு 100 வயதை கடந்த பிறகு கோயிலுக்குச் செல்ல முடிவு செய்து வந்தததாக கூறினார்.
100 வயதை கடந்து ஐயப்பனை தரிசித்த அந்த மூதாட்டிக்கு தேவசம்போர்டு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. பம்பை நதியில் இருந்து டோலி மூலம் சபரிமலை வந்துள்ளார் பாருக்குட்டியம்மா.
+ There are no comments
Add yours