மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் டந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் 179 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தகவளின்படி, ஜூலை மாதத்தில் 75 உயிரிழப்புகளும், ஆகஸ்ட் மாதத்தில் 86 உயிரிழப்புகளும், பதிவாகியுள்ளன. மேலும், செப்டம்பரில் இதுவரை மொத்தம் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
இந்த உயிரிழப்புக்கான முக்கிய காரணங்கள் குறைந்த பிறப்பு எடை, பிறப்பு மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாச நோய்கள் என்று கூறப்படுகிறது. மேலும், அங்கு பெண்களுக்கு ரத்த சோகை தொடர்பான நோய்கள் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
நந்துர்பார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் பின்னணியில் உள்ள முக்கிய பிரச்சினையை எடுத்துரைத்த தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர், “மொத்தம் 71 சதவீத இறப்புகள் 0-28 நாட்கள் வயதுடைய குழந்தைகள் ஆகும். குறைந்தது 60 சதவீத இறப்புகள் நந்தூர்பாரின் இரண்டு தாலுகாக்களில் பதிவாகியுள்ளன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க, மிஷன் லக்ஷ்யா 84 நாட்கள என்ற திட்டத்தை துவக்கியுள்ளோம். இந்த பணியில், ANC 42 நாட்களுக்கும், PNC 42 நாட்களுக்கும் தினமும் சென்று கண்காணிப்போம். இந்த முயற்சியின் மூலம், உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்போம், அதன் முடிவுகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours