சுனில் சேத்ரி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.!

Spread the love

வரும் 2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை கால்பந்தாட்ட தொடர் துவங்க உள்ளது. இதில் 13ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய கல்பந்காட்ட அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாட உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய கால்பந்தாட்ட நட்சத்திர வீரரும் கேப்டனுமான சுனில் சேத்ரி தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட அணியில் ஆசிய விளையாட்டு போட்டி விதிப்படி 23 வயதுக்கு மேற்பட்ட 3 வீர்கள் மட்டும் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜிங்கன், குர்பிரீத் சிங் சந்து ஆகியோர் சேர்க்கப்படுவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுனில் சேத்ரி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கேப்டனாகவும் செயல்பட உள்ளார். அந்த அணியில் குர்மீத் சிங், தீரஜ் சிங் மொய்ராங்தெம், சுமித் ரதி, நரேந்தர் கஹ்லோட், தீபக் டாங்ரி, அமர்ஜித் சிங் கியாம், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல் கே.பி., அப்துல் ரபீஹ் அஞ்சுகண்டன், ஆயுஷ் தேவ் செத்ரி, பிரைஸ் மிராண்டா, அஸ்பர் நூரானி, ரஹீம் அலி, வின்சி பஹேத்ரி, வின்சி பாஹேத்ரி தனு, குர்கிரத் சிங், அனிகேத் ஜாதவ் ஆகியோர் உள்ளனர்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இம்மாதம் (செப்டம்பர்) 21ஆம் தேதி முதல் உள்ளூர் ஐஎஸ்எல் (கிரிக்கெட் ஐபிஎல் போல) போட்டி துவங்க உள்ளது. ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட சில வீரர்களும் ஐஎஸ்எல்ஸில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக பெங்களூரு அணியின் கேப்டனாக தான் சுனில் சேத்ரி செயல்பட்டு வருகிறார் .

மேலும், வரும் நவம்பர் மாதம் 16 மற்றும் நவம்பர் 21ஆம் தேதிகளில் இந்திய கால்பந்தாட்ட அணி குவைத் மற்றும் காத்தார் அணிகளுடன் உலகக்கோப்பை கால்பந்காட்ட தகுதி சுற்றில் மோதவுள்ளன. ஆனால், உள்ளூர் ஐஎஸ்எல் போட்டி தொடரானது டிசம்பர் 29 வரையில் லீக் போட்டிக்கான அட்டவணை கொண்டுள்ளது.

இதனால் இந்திய கால்பந்தாட்ட அணி வீரர்கள் ஓய்வின்றி தொடர்ந்து விளையாட உள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஐஎஸ்எல் அணியிலும் விளையாடி வந்தால், சர்வதேச போட்டிகளின் போது அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவற விடும் சூழல் ஏற்படும். பெங்களூர் அணி கேப்டனாக இருக்கும் சுனில் சேத்ரி, கேரளவுடான போட்டியை தவற விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours