பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா இரண்டு ரூபாய் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள சூழலில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
663 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75-ஆக விற்பனையாகும். டீசல் விலையானது இந்த குறைப்புக்கு பின்னர் ரூ.92.34-ஆக விற்பனையாகும்.
+ There are no comments
Add yours