வரும் மே 25ம் தேதி 57 தொகுதிகளில் நடைபெற உள்ள 6ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்கியுள்ளது.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. இதுவரை 2 கட்டத்தில் 190 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளன. வரும் மே 7ம் தேதி மூன்றாம் கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய, மாநில கட்சிகள், கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் வரும் மே 25ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது.
6ம் கட்டத் தேர்தலில் பீகார் (8 தொகுதிகள்), ஹரியாணா (10), ஜார்க்கண்ட் (4), ஒடிஸா (6), உத்தரப் பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7) ஆகிய மாநிலங்கள் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 6ம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 6. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மே 7ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற மே 9 கடைசி நாளாகும்.
+ There are no comments
Add yours