எக்ஸ்பிரசுடன் மோதிய சரக்கு ரயில்.. மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து !

Spread the love

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிர்ப்பலி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. இதில் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளதாகவும் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததை மட்டும் மேற்கு எல்லை ரயில்வே மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

முதல்வர் வருத்தம்: இந்த விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours