சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி அகதிகள் முகாமில் இருக்கும் முருகனை , அங்கிருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்கும்படி அவரது மனைவி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை கேட்டு இலங்கை துணைத்தூதரகத்தில் டிசம்பரில் மனு அளிக்கப்பட்டது.
ஆவணங்கள் கிடைத்த உடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
+ There are no comments
Add yours