ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்தது. இதில் மாநிலத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து அசோக் கெலாட் கூறுகையில், ‘‘பீகாரைப் போல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் விகிதாச்சார முறை பங்கேற்பு அறிவுரைகள் மாநிலத்தில் மேம்படுத்தப்படும்.நாட்டிற்குள் பல்வேறு சாதிகள் உள்ளன. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். எந்த சாதி, எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்பதை அறிந்தால், அவர்களுக்காக நாம் என்ன திட்டங்களைச் செய்ய வேண்டும் என்பதை அறியலாம்’’ என்றார்.
+ There are no comments
Add yours