கட்டி முடித்து முதல் மழைக்கே ஒழுகும் ராமர் கோவில்.. பக்தர்கள் அதிர்ச்சி !

Spread the love

கட்டி 6 மாதங்கள் ஆவதற்குள் அயோத்தி ராமர் கோயிலின் கூரை, பருவத்தின் முதல் மழைக்கே ஒழுகியது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பாண்டின் பருவமழை தொடங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மேற்கூரை கசிந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோயில் அர்ச்சகர்கள் ஆச்சரியம் தெரிவிக்க, பக்தர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ”ஜனவரி 22 அன்று கோயில் பிரான் பிரதிஷ்டா விழா நடத்தப்பட்டது. முழுதாய் 6 மாதம் ஆவதற்குள் கூரையிலிருந்து நீர் கசிகிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ராம் லல்லா சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கூரையில் கசிவு கண்டிருப்பது பக்தர்களுக்கு கவலை தந்திருக்கிறது. ராமர் கோயிலின் மேலாக பெய்யும் மழை முறையாக தரைக்கு வழிவதற்கான வசதி இல்லாததால், மேலே தண்ணீர் தேங்கி நின்று அதுவே கசிந்து, சிலைக்கு அருகில் சேகரமாவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோயில் கட்டுமானத்தின் நிறைவுறா பணிகள் குறித்தும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கவலை தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி ஜூலை 2025-க்குள் ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் முழுமை அடைவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் மீது அவர் பல்வேறு கவலைகளை முன்வைத்துள்ளார். தற்போதைக்கு ராம் லல்லா சிலைக்கருகே மழை நீர் தேங்குவதை சரிசெய்யாவிடில் வழிபாடு மற்றும் பூஜை நடைமுறைகளை மேற்கொள்வதை அவை சிக்கலாக்கும் எனவும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours