கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விலங்கு மூலம் பரவும் நோய் தாக்கி தந்தை, மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது புருசெல்லோசிஸ் எனப்படும் விலங்கு மூலம் பரவும் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு ஜூனோடிக் நோயாகும்.
இது முக்கியமாக கால்நடைகள், பன்றிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் நாய்களைப் பாதிக்கிறது. இந்த நோய், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு மூலமாகவும், அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலமாகவும் பரவுகிறது. ஆனால், இந்த நோய் மனிதர்களில் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவது மிகவும் அரிது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விலங்குகளால் பரவும் பாக்டீரியா நோயான புருசெல்லோசிஸ் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நோய் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை, மகன் இருவரும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், ப்ரூசெல்லோசிஸ் பாதிக்கப்பட்ட யாருக்கும் உயிர் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மேலு, இந்த ப்ரூசெல்லோசிஸ் நோய்த்தொற்று நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். புருசெல்லோசிஸ் பரவுவதைத் தடுக்க கால்நடைகள், மற்றும் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் பரிந்துரைக்கின்றனர்.
+ There are no comments
Add yours