தெலுங்கானா(telangana) மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வித் துறைகளில் ரூ.13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சார்பில் ஏராளமான வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் 9 வருடங்களாக இருக்கும் பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை என்று குற்றசாட்டுகள் முன்வைப்பட்டது.
அண்மையில், மத்திய அமைச்சரும், தெலுங்கானா பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி, செப்டம்பர் 29 அன்று கேசிஆர் அரசை விமர்சித்தார்.
தேவையான நிலத்தை மாநிலம் வழங்கத் தவறியதால் சில திட்டங்களைத் தொடங்க முடியவில்லை என்று கூறி முதல்வர் கேசிஆர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தெலுங்கானா அரசியலில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் 9 வருடங்களாக தெலுங்கானா மாநிலத்திற்கு எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை அம்மாநிலத்திற்கு சிறப்பு தகுதியையும் வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours