விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் தந்தை காலமானார்!

Spread the love

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் தந்தை பனராசிலால் சாவ்லா காலமானார்.

நாட்டிலேயே முதல் பெண்ணாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்தவர் கல்பனா சாவ்லா. இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் 1961-ம் ஆண்டு கல்பனா சாவ்லா பிறந்தார்.

தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கிய கல்பனா சாவ்லா 1982-ம் ஆண்டு, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாடிகள் இன்ஜினீயரிங் படித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்று விண்வெளி பொறியியல் துறையில் முதுநிலை படிப்பு படித்து, முனைவர் பட்டமும் பெற்றார்.

2003 ஆண்டு சாவ்லா உட்பட 7 பேர் கொண்ட குழு கொலம்பிய விண்வெளி ஊர்தியில் விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சியை முடித்து விட்டு திரும்பிய போது , விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேரும் மரணமடைந்தனர்.

கல்பனா சாவ்லாவின் சாதனைக்களுக்கு ஆதரவாக இருந்தவர் கல்பனா சாவ்லாவின் தந்தை பனராசிலால் சாவ்லா. இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த விலையில் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததை அடுத்து தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார். பனராசிலால் சாவ்லாவின் கடைசி விருப்பப்படி அவரது உடல் கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours