மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி பாஜக தலைமையிலான கூட்டணி 175-195 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமையிலான எம்விஏ கூட்டணி 85-112 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7-12 இடங்களை கைப்பற்றும்.
அதேபோல பிஜேபி-சிவசேனா-என்சிபி கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு மேட்ரிஸ் கணித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்கள் வரை வெல்லும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. காங்கிரஸ்-சிவசேனா (யுபிடி)-என்சிபி (எஸ்சிபி) கூட்டணி 110-130 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8-10 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
பி-மார்க் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்கள் வரை வெல்லும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ்-சிவசேனா (யுபிடி)-என்சிபி (எஸ்சிபி) கூட்டணி 126-146 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 2-8 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
லோக்சஹி மராத்தி ருத்ரா கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 128 முதல் 142 இடங்கள் வரை வெல்லும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ்-சிவசேனா (யுபிடி)-என்சிபி (எஸ்சிபி) கூட்டணி 122-140 இடங்களில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 18-23 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours