சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் பாஜக தலைவர் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கரில் பாஜக தலைவர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். நாராயண்பூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ரத்தன் துபே நக்சல்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. ரத்தன் துபே இன்று கௌசல்னார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அதிகம் உள்ள சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவு டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. மாவோயிஸ்டுகளால் அதிகம் உள்ள 20 தொகுதிகளில் இன்னும் மூன்று நாள்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. நவம்பர் 7-ம் தேதி அதாவது வரும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிகளின்படி 48 மணி நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கடந்த மாதம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் பாஜக தலைவர் ஒருவரும் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார். நவராத்திரி பூஜை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பாஜக தலைவர் இரவு 8:30 மணியளவில் நக்சலைட்டுகள் வழியில் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours