கொச்சி: அண்டை மாநிலமான கேரளாவின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றன. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎஃப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பாஜக கேரளாவில் தனது கால் தடத்தை பதித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
+ There are no comments
Add yours