புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பை நிறுத்த வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘’ தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் புதிய மருத்துவமனைகள் மற்றும் முதலீடுகள் இல்லாத நிலை ஏற்படும். இதுத் தொடர்பாக மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்க்க உத்தரவிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’’ என அந்தக் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours