இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நீதிமன்றங்களை அனைவரும் அணுகக்கூடிய வகையில் நீதித்துறை உள்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
நீதியை அணுகுவதற்கான தடைகளை நீக்குவதே நமது முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், தேசிய கட்டமைப்பின் பொதுவான பணிகளில் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகியவை தொடர்புடையவை என்று குறிப்பிட்டார்.
“தன்னிச்சையான கைதுகள் மற்றும் சொத்துக்களை இடிப்பு” என்று குறிப்பிட்ட அவர் “சமூகத்தில் உள்ள கடைசி நபருக்கும் நீதியை” உறுதி செய்வதை வலியுறுத்தினார்.
நமது நீதிமன்றங்களை அனைவரும் அணுகக்கூடிய வகையில் நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
“நீதி வழங்குவதே நீதித்துறையின் பலம். தன்னிச்சையான கைது, மிரட்டல் இடிப்பு, சட்டத்திற்குப் புறம்பாக சொத்துக்கள் இணைக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை தனி நபருக்கும் உள்ளது” என்றும் சந்திரசூட் கூறினார்.
தில்லியில் நடைபெற்ற வழக்கறிஞர்களின் சுதந்திர தின நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்தார் .
+ There are no comments
Add yours