ஹரியாணா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் மருமகளும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான கிரண் சவுத்ரி தன் மகளுடன் பாஜகவில் இன்று இணைந்தார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஹரியாணா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் மருமகளும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான கிரண் சவுத்ரி பாஜகவில் இன்று இணைந்தார். அப்போது ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி, முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான மனோகர் லால் கட்டார் , கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர். கிரண் சவுத்ரியுடன் அவரது மகள் ஸ்ருதி சவுத்ரியும் அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இன்று இணைந்துள்ள கிரண் சவுத்ரி, பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அதேபோல ஸ்ருதி சவுத்ரி ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கிரண் சவுத்ரி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.
அவருக்கு பாஜக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கிய மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், கிரண் சவுத்ரியை பாஜகவிற்கு வரவேற்கிறேன். தனது உடல் காங்கிரசில் இருந்தாலும் மனம் பாஜகவில் இருப்பதாக என்று ஏற்கெனவே கூறினார். கிரண் சவுத்ரி மற்றும் ஸ்ருதிக்கு கட்சியில் முழு மரியாதை கிடைக்கும் என்று கூறினார்.
+ There are no comments
Add yours