சர்ச்சைக்குரிய பேச்சால்.. கண்கலங்கிய அமைச்சர் ரோஜா!!

Spread the love

ஆபாசமாக சித்தரித்து விமர்சிக்கும் எதிர்க்கட்சியின் தரம் தாழ்ந்த பேச்சால் அமைச்சர் ரோஜாகண்கலங்கிய சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு கைதானதை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணி தலைவர் வாங்கலபுடி அனிதா கடுமையாக குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய அவர், ‘ரோஜா ரெக்கார்டு டான்ஸ் ஆடினார். ஆபாசப் படத்தில் நடித்தார்’’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பண்டாரு சத்யநாராயண மூர்த்தி கைதுசெய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டு பொருளாக பார்ப்பதாக குற்றம்சாட்டினார். உங்கள் வீட்டு பெண்களை இப்படி அவதூறாக பேசினால் ஏற்று கொள்வீர்களா என்றும் கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார்.

தன்னை பற்றி தரம் தாழ்த்தி பேசியவுடன் சத்யநாராயண மூர்த்தியை அவரது மனைவி செருப்பால் அடித்திருக்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறினார்.தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ரோஜாவை தாக்கி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours