ஒரே கட்சி, ஒரே தலைவர் ஆதிக்கம் செலுத்துவது கூட்டணிக்கு நல்லதல்ல என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது. இந்த முடிவு தேசிய அளவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கி உள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி
இந்த சூழலில் இதுகுறித்து பேசிய பாஜக – அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “கூட்டணிக்கு ஏற்ப பாஜக மாநில தலைமையின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வது நல்லது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற அதிமுகவின் அறிவிப்பு யாரும் எதிர்பாராத நிகழ்வு. ஒரே கட்சி, ஒரே தலைவர் ஆதிக்கம் செலுத்துவது கூட்டணிக்கு நல்லதல்ல. அதிமுகவுடனான பிரச்சினையை பாஜக தலைமை மேலோட்டமானதாக பார்க்க கூடாது” என்று கூறினார்
+ There are no comments
Add yours