கடந்த 24 மணி நேரத்தில் நேபாளம், மியான்மர், காஷ்மீர், என இந்தியா மற்றும் எல்லையையொட்டி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை நேபாளத்தில் 5.3 என்ற அளவிலும், மாலை 4.3 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, நேற்றிரவு 10.56 மணிக்கு ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு ஆகியுள்ளது.
இன்று காலை 2 மணிக்கு மணிப்பூரிலும் 3.5 என்ற அளவிலும், மணிப்பூர் எல்லையை ஒட்டி மியான்மரிலும் 4.3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours