ஹைதராபாத்: 100 கோடி ரூபாய்க்கு கடத்தல் மோசடியில் ஈடுபட்ட பணமோசடி வழக்கில் அடிப்படையில், தெலங்கானா வருவாய் அமைச்சர் பி சீனிவாச ரெட்டி மற்றும் சிலருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பணமோசடி வழக்கில் ஹைதராபாத் உட்பட மாநிலத்தில் உள்ள சுமார் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 கோடி மதிப்புள்ள ஏழு கடிகாரங்களை வாங்கியதாகக் கூறப்படும், ராகவ் குழுமத்தைச் சேர்ந்த சினிவாச ரெட்டியின் மகன் ஹர்ஷா ரெட்டிக்கு எதிரான வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) புகாரின் அடிப்படையில் இந்த பணமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி மதிப்பிலான ஹவாலா மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடியில் நவீன் குமார் என்ற நபரையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
தெலங்கானாவின் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அரசில் வருவாய், வீட்டு வசதி, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சராக சீனிவாச ரெட்டி உள்ளார். அவருக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
+ There are no comments
Add yours