ஆந்திராவில் நடந்த ரயில் விபத்துக்கு ஓட்டுநர்கள் இருவரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியது உண்மை இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு பல்வேறு ரயில் விபத்துகள் நடந்தன. அதில், கடந்தாண்டு அக்டோபர் 29-ம் தேதி ஆந்திர மாநிலம், விஜயநகர் மாவட்டம், கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராயகடா பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பலசா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக ராயகடா ரயில் மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில், 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். இதில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அப்போது பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், “ரயிலை இயக்கிய இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால், இரண்டு சிக்னல்கள் பழுதாகி இருந்ததை கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியுள்ளனர். அதனால்தான் கட்டுப்பாட்டை மீறி ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது” என்று சொன்னார்.
இது தொடர்பான மேல் விசாரணையில், விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்களின் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்ததில் அமைச்சர் கூறியது பொய் என தெரியவந்துள்ளது. அமைச்சர் கூறியது போல, ரயிலை இயக்கிய இருவரும் கிரிக்கெட் மேட்சைப் பார்க்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
+ There are no comments
Add yours