விருது வென்ற சீதா ராமம் !

Spread the love

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற 14வது இந்திய திரைப்பட விழாவில் சீதா ராமம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

கடந்தாண்டு துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சீதா ராமம்’. காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் 14வது இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. அதில், ‘சீதா ராமம்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. படத்தின் இயக்குனர் ஹனுராகவ புடி விருதினை பெற்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours