இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும். இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெறும். மாதிரி விண்கலம் 16.6 கி.மீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீர்ரகள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும்.
இந்த சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மோசமான வானிலை காரணமாக 8.30-க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக இந்த சோதனைக்கு மேலும் தாமதமாகும் என அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் மோசமான வானிலை, கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ககன்யான் சோதனை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய சோம்நாத் அவர்கள், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்து இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. திட்டமிட்டபடி கடலில் மாதிரி விண்கலம் தரையிறங்கியது.
+ There are no comments
Add yours