தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் தன்னை கடவுளின் குழந்தை என்கிறார்.
நான் கேட்கிறேன், கலவரத்தைத் தூண்டிவிடவும், விளம்பரங்களின் வழியாகப் பொய்களை பரப்பவும், என்ஆர்சியை நடைமுறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்? நூறுநாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்தவா, கிராமப்புற வீடுகள் கட்டப்படுவதைத் தடுக்கவா தனது தூதரை இறைவன் அனுப்பி வைப்பார்? மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்கிற உத்தரவாதத்திலிருந்து இறைவன் பின்வாங்குவாரா என்ன? கடவுளால் இத்தகைய செயல்களை செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours