தங்கம் விலை குறைகிறது- மத்திய பட்ஜெட் 2024-25.

Spread the love

Today, the price of one gram (22 carat) of jewelery gold is selling at Rs 6,700, up by Rs 10 from yesterday's price.
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 10 ரூபாய் உயர்ந்து ரூ.6,700-க்கு விற்பனையாகி வருகிறது.

2024-2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிவித்தார்.

அவர் தனது உரையில் முக்கியமாக தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவித்தார். இதனால் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிளாட்டின் மீதான சுங்கவரி 6.4 சவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் மொத்தத்தில் ஆபரணங்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours