இணைய தளத்தை ஆக்கிரமித்த இந்தி மொழி- எல்ஐசி விளக்கம் !

Spread the love

எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தி Default மொழியாக மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் எல்ஐசி வருத்தம் தெரிவித்து ஆங்கிலத்துக்கு பதில் இந்தி மொழி இடம்பெற்றது எப்படி என்பது பற்றி முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

எல்ஐசியின் இணையதள பக்கம் முழுவதும் ஆங்கிலத்துக்கு பதில் டீபால்ட்டாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இது இந்தி தெரியாத தமிழகம் உள்பட தென்மாநிலங்களை சேர்ந்தவர்களால் விபரங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வரும் நிலையில் எல்ஐசி இணையதள பக்கம் வழியாக இந்தியை திணிக்க முயல்வதாக அரசியல் தலைவர்கள் சாடினர். மேலும் இணையதள பக்கத்தின் ‛டீபால்ட்’ மொழியாக மீண்டும் ஆங்கிலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் தான் தற்போது எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் ‛டீபால்ட்’ மொழியாக மீண்டும் ஆங்கிலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு எல்ஐசி நிறுவனம் சார்பில் விளக்கத்தோடு மக்கள் எதிர்கொண்ட சிரமத்துக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ LIC India Forever என்ற எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது..

‘எங்களின் கார்ப்பரேட் இணையதள பக்கம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொழி Shuffling செய்யவில்லை. தற்போது இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. இப்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சேவையை வழங்குகிறது. முன்னதாக ஏற்பட்ட சிரமத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் – டீம் எல்ஐசி” என கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours