தன்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல… ஆனந்த் அம்பானி !

Spread the love

தனது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி பேசியதை கேட்டு அவர் தந்தையும் முன்னணி தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளார்.

நாட்டின் முன்னணி தொழில் அதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழா மார்ச் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதியான இன்று வரை நடைபெறுகிறது. முகேஷ் அம்பானியின் பூர்விகமான குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்த திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் விருந்தினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விலங்குகள் குறித்த வந்தாரா காட்சி, டிரோன்களின் கண்கவர் நிகழ்ச்சி, 9 முறை கிராமிய விருது வென்ற பாப் பாடகி ரிஹானாவின் ஆடல் பாடல் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் களைக்கட்டி வருகின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய தொழில் அதிபரும், ஆனந்த் அம்பானியின் தந்தையுமான முகேஷ் அம்பானி, என் அப்பா திருபாய் சொர்க்கத்தில் இருந்து அவருக்கு மிகவும் பிடித்த பேரன் ஆனந்த்தை ஆசிர்வதிப்பார் என்றார்.​

இந்த மகிழ்ச்சியான நாளை, ஜாம்நகரில் கொண்டாடுவதில் தனது அப்பா கூடுதல் மகிழ்ச்சி அடைவார் என்றும் தனக்கும் தனது அப்பாவிற்கும் ஜாம்நகர் கர்ம பூமி என்றும் கூறினார். மேலும் ஆனந்த் என்பதற்கு சமஸ்கிருதத்தில் முடிவில்லாதது என்று அர்த்தம் என்று கூறிய முகேஷ் அம்பானி, ஆனந்திடம் அதற்கான சாராம்சத்தை தான் பார்ப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார். மேலும் தன மகன் ஆனந்த் உருவத்தில் தன்னுடைய தந்தையை பார்ப்பதாகவும் கூறினார் முகேஷ் அம்பானி.

தன்னுடைய தந்தையும் அப்படிதான், எல்லாமே முடியும் என்ற குணம் கொண்டவர் என்று கூறிய முகேஷ் அம்பானி, தனது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சாண்ட் மற்றும் தனது மனைவி நீடா ஆகியோரையும் புகழ்ந்து பேசினார். இந்நிலையில் மணமகனான ஆனந்த் அம்பானியும் விருந்தினர்கள் முன்பு உரையாற்றினார். அப்போது சிறுவயதில் தான் அனுபவித்த பிரச்சனைகள் குறித்து உருக்கமாக பகிர்நது கொண்டார் ஆனந்த் அம்பானி.

தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளார்கள் என்று கூறிய ஆனந்த் அம்பானி, தன்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை தானும் அனுபவித்துள்ளதாக கூறினார். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்துள்ளதாக கூறிய ஆனந்த் அம்பானி, தன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் தன்னை விடவில்லை என்றும் எப்போதும் தனக்கு முழு ஆதரவோடு இருந்தார்கள் என்றும் உருக்கமாக கூறினார்.ஆனந்த் அம்பானியின் இந்த பேச்சை கேட்ட முகேஷ் அம்பானி, கட்டுப்படுத்த முடியாமல் தன்னையும் மீறி அழுதார்.

முகேஷ் அம்பானி தேம்பி தேம்பி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சாண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.​

குவிந்த பிரபலங்கள்

அம்பானி வீட்டு விசேஷத்தில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித், ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான், சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராம் சரண், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours