மக்களின் கோபத்தால் இந்தியா கூட்டணி பேரணி ரத்து! சொல்கிறது பாஜக !

Spread the love

“சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டதால் மத்திய பிரதேச மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால் இந்தியா கூட்டணியினர் பயந்து போய் பேரணியை ரத்து செய்துவிட்டனர்” என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியினர் ஒன்றுபட்டு பல்வேறு நகரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த கூட்டணியின் பேரணி வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் திடீரென இன்று அறிவித்தார்.

இதனிடையே இந்தியா கூட்டணி பேரணி ரத்துபற்றி பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “இது பொதுமக்களின் கோபம். சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டு உள்ளது. டெங்கு, மலேரியா என அழைக்கப்பட்டு உள்ளது. சனாதன தர்மத்திற்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை மத்திய பிரதேச மக்கள் சகித்து கொள்ளமாட்டார்கள். எங்களுடைய நம்பிக்கையை அவர்கள் புண்படுத்தி இருக்கிறார்கள் என இந்தியா கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வகையிலும் இதனை சகித்து கொள்ள முடியாது.

மத்திய பிரதேச மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால் இந்தியா கூட்டணியினர் பயந்து போய்விட்டனர். அதனாலேயே அவர்கள் பேரணியை ரத்து செய்து விட்டனர். இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக பொதுமக்களின் கோபம் உள்ளது. இதனை பொதுமக்கள் விட்டு விடமாட்டார்கள். இந்தியா கூட்டணியின் தலைமைக்கு பலம் இல்லை. போஸ்டர்களில் யார் புகைப்படம் இருக்க வேண்டும் என்பதற்காக பழமையான கட்சிக்குள் குழப்பமும், மோதலும் நிறைய காணப்படுகிறது. ஆனால் பா.ஜ.க.வில், தேர்தலின்போது ஒவ்வொருவரும் பணியாற்றுவார்கள்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours