பருவநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளை கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னிலை வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தில்லி கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வளாகத்திற்குள் மத்திய அரசின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், 4 கோடியாவது மரக்கன்றை அவர் நட்டார்.
அப்போது, பேசிய அவர், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சிஆர்பிஎப் மூலம் 5 கோடி மரங்கள் நடப்படும் என்றார். மேலும், சுற்றுச்சூழலை பராமரிக்க மரங்களை வளர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து புதிய கட்டடங்களையும் அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
+ There are no comments
Add yours