நவரத்தினா அந்தஸ்து பெற்றது IRCON இன்டர்நேஷனல்… மத்திய அரசு அங்கீகாரம்!

Spread the love

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான IRCON இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளது.

IRCON International நிறுவனம் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் முதல் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விரைவான போக்குவரத்து அமைப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் வரையிலான உள்கட்டமைப்பு கட்டுமான சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதுமட்டும் இல்லாமல் RITES போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆலோசனை, ரயில்வே ஆய்வு, ரோலிங் ஸ்டாக் குத்தகை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது.

ஏற்கெனவே மத்திய அரசு 14 பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ், கான்கார், இன்ஜினியர்ஸ் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், எம்டிஎன்எல், நால்கோ, என்பிசிசி, என்எல்சி இந்தியா, என்எம்டிசி லிமிடெட், ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆர்விஎன்எல், ஓஎன்ஜிசி மற்றும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் ஆகியவை ஏற்கனவே மத்திய அரசன் நவரத்தின அங்கீகாரம் பெற்றுள்ளவையாகும்.

ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு நவரத்னா அந்தஸ்து கிடைக்க வேண்டுமெனில், அந்நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம் ஈட்ட வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,000 கோடிக்கு மேல் 3 வருடங்களுக்கு இருக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நவரத்னா அந்தஸ்து கிடைக்கும்.

2023-ம் ஆண்டில் இதுவரை IRCON இன்டர்நேஷனல் பங்கின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசின் அங்கீகாரத்தால் பங்கின் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours