முடிவை வாபஸ் பெற்ற இஸ்ரோ தலைவர்..!

Spread the love

தனது சுயசரிதையை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.

தற்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் சுயசரித புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அதில், 60 வயது நிறைவடைந்தவுடன் தானுக்கும், சிவனும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2018 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவராக AS கிரண் குமார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய பெயரும், சிவன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இப்பதவியை நான் அடைவேன் என்று எதிர்பார்த்தாலும் அது நடக்கவில்லை.

இருப்பினும், சிவன் இஸ்ரோவின் தலைவரான பிறகும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டு விலகவில்லை. அந்த பதவி குறித்து சிவனிடம் கேட்டபோது ​​சிவன் பதில் எதுவும் சொல்லாமல் தயங்கினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி என் சுரேஷின் தலையீட்டின் காரணமாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.

இஸ்ரோ தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு பதிலாக சிவன் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க முயன்றதாகவும் சோம்நாத் தனது சுயசரிதையில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சந்திராயன் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் மோடி வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கி வைத்தனர். தேவையான சோதனைகளை மேற்கொள்ளாமல் அவசரமாக ஏவப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் தோல்வியடைந்ததாகவும் அவர் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புத்தகத்தில் தனது கே.சிவனைப் பற்றிய சில விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது வரவிருக்கும் சுயசரிதையை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.

முன்னாள் இஸ்ரோவின் தலைவர் சிவன் தலைவராக இருந்தபோது சந்திராயன் 2 திட்டமானது நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டது. அதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலுவின் தரையைப் பரப்பில் மோதி திட்டம் தோல்வி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours