வங்கிப் பரிவர்த்தனைகளில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யப்படலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டால், அது குறித்து வருமான வரித்துறை கேள்வி எழுப்பும். சரியான விளக்கம் கொடுக்காவிட்டால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை துல்லியமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஒரு தனி நபரின் வங்கிக் கணக்கில் ஒரு நாளில் அதிகபட்சமாக இவ்வளவு தொகை வரை பரிமாற்றம் செய்யலாம். அதற்கு மேல் செய்தால் அது குறித்து விளக்கம் கோரப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, வருமான வரித்துறையின் விதிமுறைகளை சாதாரண மக்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் பணப்பரிமாற்றம் செய்ய பான் எண் தேவை என்பது எவ்வாறு அவசியமோ அது போல வங்கியில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிமாற்றம் செய்யும்போது அதனை வருமான வரித்துறை கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, வருமான வரிச் சட்டம் 269எஸ்டியின்படி, ஒரு நாளில் ஒரு நபருக்கு ஒரே பரிமாற்றத்தில் அல்லது தொடர்ச்சியான பரிமாற்றங்களில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டால் அதற்கு விளக்கம் கேட்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
+ There are no comments
Add yours