பிரதமர் மோடியின் முயற்சியால் தான் தீர்வு கிடைத்தது….அண்ணாமலை விளக்கம் !!

Spread the love

காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால் தான் தீர்வு கிடைத்தது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருக்கிறது. இதற்கிடையே கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தமிழ்நாட்டில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ள நிலையில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக் கோரி தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான டெல்டா விவசாயிகள் பங்கேற்ற நிலையில்,தமிழக காவல்துறை கைது செய்தது.

இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..

கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருக்கிறார்கள்.

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால் தான் தீர்வு கிடைத்தது. தற்போதும், தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours