திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் கன்வாயில் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் உயிர்தப்பினார்.
கேரளாவின் கோட்டயம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு முதல்வர் பினராயி விஜயன் காரில் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்புக்கு 5 கார்கள் சென்றன.
வாமனாபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது குறுக்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதமால் இருக்கு பாதுகாப்பு வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் திடீரென பிரகே் அடித்ததால், பின்னால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதின. இதில் முதல்வர் சென்ற காரும் மோதி சேதமடைந்தது. யாருக்கும் காயமில்லை.
+ There are no comments
Add yours