புதுடில்லி: அடுத்த ஆகஸ்ட் 15ல் இதே செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, ‛அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி’ எனக் கூறியுள்ளார்.
இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து, காங்கிரஸ்தலைவர் கார்கே, அடுத்த ஆண்டு மீண்டும் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றுவார் எனவும் ஆனால் அவர் வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், கார்கே, ஒவ்வொரு நபரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறோம் என்று கூறுகிறார்கள் எனவும் ஆனால் வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய செய்வது மக்கள் கையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து 2024ல் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தை காட்டுகிறது எனவும் சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல எனவும் அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் எனவும் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
+ There are no comments
Add yours