முன்னாள் துணைப் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 96 வயதான அரசியல் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 3 ஆம் தேதி, பாஜக தலைவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஒரு நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு, அத்வானி முதுமை தொடர்பான பிரச்சனைகளுக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் கழித்து, அவர் முதன்மை மருத்துவ நிறுவனத்தில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மார்ச் 31 அன்று, ஜனாதிபதி திரௌபதி முர்மு, அத்வானிக்கு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவை அவரது இல்லத்தில் வழங்கினார் . பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் எல்.கே.அத்வானியின் உடல்நிலையை நரம்பியல் மருத்துவ நிபுணர் கவனித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
+ There are no comments
Add yours