ராகுலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது மக்களவை செயலகம் !

Spread the love

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், அதனை மக்களவை செயலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நடந்து முடிந்த 4 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட்டார். இதையடுத்து இரண்டு தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 14 நாட்களில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை நேற்று முன்தினம் அறிவித்தார்.

ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours