பாட்னா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
மம்தா பானர்ஜியை இண்டியா கூட்டணிக்கு தலைவராக அனுமதிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இந்த முடிவு இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிஸுக்கு, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
முன்னதாக, லாலுவின் மகனும், மூத்த ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், “மம்தா பானர்ஜி உட்பட இண்டியா கூட்டணியின் எந்த மூத்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று கூறியிருந்தார். ஆனால் ஒருமித்த கருத்து மூலம் முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த டிசம்பர் 6 அன்று, மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியின் செயல்பாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்தினார், வாய்ப்பு கிடைத்தால் கூட்டணிக்கு பொறுப்பேற்க தயார் என்றும் அவர் கூறினார். மம்தா தலைமையேற்பதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரவேற்றார்.
+ There are no comments
Add yours