அகமதாபாத்: இந்திய கடற்படை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (என்சிபி) மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) ஆகியவை இணைந்து குஜராத் போர்பந்தர் கடற்கரையில் ஒரு ஈரானிய கப்பலில் இருந்து 700 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளைக் கைப்பற்றின.
இந்திய கடற்படை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (என்சிபி) மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், தோராயமாக 700 கிலோ எடையுள்ள மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கொண்ட ஒரு கப்பல் குஜராத்தின் இந்தியாவின் பிராந்திய கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
எந்த அடையாள ஆவணங்களும் இல்லாமல் கப்பலில் இருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களை ஈரானியர்கள் என்று கூறிக்கொண்டனர். சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் கண்காணிப்பின் கீழ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருட்களைக் கைப்பற்றும் நடவடிக்கை வியாழக்கிழமை மாலை தொடங்கியது
பதிவு செய்யப்படாத கப்பல் இந்திய கடற்பகுதியில் போதை மருந்துகளுடன் நுழையும் என்று நம்பகமான உளவுத்துறை தகவலின் பேரில் “சாகர்-மந்தன் – 4” என்ற பெயரிடப்பட்ட ஆபரேஷன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து இன்று அந்த கப்பல் கண்டறியப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ஒருங்கிணைப்புடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் இதுவரை சுமார் 3400 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. 11 ஈரானியர்கள் மற்றும் 14 பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று போதைப்பொருள் பறிமுதல் செய்யபட்டதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘போதைப்பொருள் இல்லாத பாரதம் என்ற பிரதமர் நரேந்திரமோடி ஜியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, எங்கள் ஏஜென்சிகள் இன்று சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, குஜராத்தில் 700 கிலோ கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த கூட்டு நடவடிக்கை, தொலைநோக்குப் பார்வைக்கான நமது அர்ப்பணிப்புக்கும், அதை அடைவதில் நமது ஏஜென்சிகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
+ There are no comments
Add yours