குண்டர் சட்டத்தில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Spread the love

குண்டர் சட்டத்தில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரிக்கு 2009 குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் அன்சாரியின் கூட்டாளி சோனு யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2005ம் ஆண்டு முதல் நான் சிறையில் இருக்கிறேன் என்று அன்சாரி, 2009 குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து எம்பி/எம்எல்ஏ நீதிமன்ற நீதிபதி அரவிந்த் மிஸ்ராவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக அவரது வழக்கறிஞர் லியாகத் வாதிட்டார். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம், நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார். 2009ஆம் ஆண்டு நடந்த கபில்தேவ் சிங் கொலையில் சதித்திட்டம் தீட்டியதாக அன்சாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. மீர் ஹசன் என்ற நபர் மீதான தாக்குதல் தொடர்பான மற்றொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே, அன்சாரி 2011 மற்றும் 2023 ஆகிய இரு வழக்குகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். மேலும், இந்த ஆண்டு ஏப்ரலில், 1996 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் நந்த்கிஷோர் ருங்தாவை கடத்திய வழக்கு மற்றும் 2005 ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொல்லப்பட்ட வழக்கில் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், கடந்த 1991-ம் ஆண்டு நடந்த அவதேஷ் ராய் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கேங்ஸ்டர், அரசியல்வாதி முக்தார் அன்சாரிக்கு வாரணாசி நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் இன்று இந்தாண்டு ஜூனில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முக்தார் அன்சாரிக்கு எதிரான 61 குற்ற வழக்குகளில், அவதேஷ் ராய் கொலை வழக்குடன் சேர்த்து 5 வழக்குகளில் அவர் குற்றாவளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், பல்வேறு பகுதிகளில் இன்னும் 20 வழக்குகளில் அன்சாரி மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது, 2009 குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில், அரசியல்வாதி முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து காஜிபூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேங்ஸ்டர் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரிக்கு பல்வேறு வழக்குகளில் செப்டம்பர் 2022க்குப் பிறகு தற்போது இன்று ஆறாவது முறையாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முக்தார் அன்சாரி, 1996, 2002, 2007, 2012 மற்றும் 2017 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். இதில் கடைசி மூன்று வெற்றிகள் அவர் சிறையில் இருந்தபோது கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours