ஐந்து முறை முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி , சட்டப்பேரவை தேர்தலில் பின்னடவை சந்தித்து வருகிறது. 76 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ளன. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி 147 தொகுதிகளிலும், பாஜக 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 63.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 50 தொகுதிகளில் அதிக தொகுதிகளை பெற்று முன்னிலை வக்கிற்து.என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி 35 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால்,ஐந்து முறை முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது. காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 23 தொகுதிகளையும், காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
+ There are no comments
Add yours