புதிய அமைச்சரவை.. யார் யாருக்கு என்ன துறைகள் ? முழு விபரம்.

Spread the love

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்:

பிரதமர் மோடி – மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை
ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை
அமித் ஷா – உள்துறை
நிதின் கட்கரி – மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
ஜெ.பி.நட்டா – சுகாதாரத் துறை
சிவராஜ் சிங் சவுகான் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை
நிர்மலா சீதாராமன் – நிதித் துறை
எஸ்.ஜெய்ஷங்கர் – வெளியுறவுத் துறை
மனோகர் லால் கட்டார் – வீட்டுவசதி மற்றும் மின் துறை
ஹெச்.டி.குமாரசாமி – கனரக தொழில் துறை
பியூஷ் கோயல் – தொழில் மற்றும் வர்த்தகத் துறை
தர்மேந்திர பிரதான் – கல்வித் துறை
ஜித்தன் ராம் மாஞ்சி – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
ராஜீவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம் மற்றும் பால்வளத் துறை
சர்பானந்த சோனோவால் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை
வீரேந்திர குமார் – சமூக நீதித் துறை
ராம்மோகன் நாயுடு – விமானப் போக்குவரத்து துறை
பிரகலாத் ஜோஷி – நுகர்வோர் விவகாரங்கள், உணவுத் துறை
ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நலத் துறை
கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை
அஷ்விணி வைஷ்ணவ் – ரயில்வே துறை
பூபேந்திர யாதவ் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை; ஜோதிராதித்ய சிந்தியா – தகவல் தொழில்நுட்பத் துறை; கஜேந்திரசிங் ஷெகாவத் – சுற்றுலா மற்றும் கலாச்சார துறை; கிரண் ரிஜிஜூ – நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை

அன்னபூர்ண தேவி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியத் துறை
மன்சுக் மாண்டவியா – தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் துறை
கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கள் துறை
சிராக் பாஸ்வான் – உணவு பதப்படுத்துதல் துறை
சி.ஆர்.பாட்டீல் – ஜல் சக்தி துறை


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours