விண்ணப்பிக்க அக்டோபர் 4ம் தேதி கடைசி நாள்..!

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 48 இடங்களும், பட்டியல் பழங்குடியினருக்கு 64 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 01‐09‐2023 அன்று 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி, வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். அதே போல் நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதி பெறுவார்கள்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in. மூலம் எதிர்வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours