ரயிலை தள்ளிய பயணிகள்: பீகாரில் வினோதம் !

Spread the love

பீகாரில் ரயிலை பயணிகள் சேர்ந்து தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பயணிகள் ரயிலை தள்ளிச்செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பீகார் மாநிலம், லக்கிசராயில் உள்ள கியுல் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

அங்கு பாட்னா – ஜாசிடிஹ் மெமு ரயிலில் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, தீ விபத்து நடந்த ரயில் பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக ரயில் பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டது.

அப்போது பிரிக்கப்பட்ட ரயிலின் இதர பகுதி பெட்டிகளை இளைஞர்கள், சிறுவர்கள் உற்சாகமாக தள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை ரயில்வே துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு தீ அணைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கிழக்கு மத்திய ரயில்வே (இசிஆர்) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சரஸ்வதி சந்திரா கூறுகையில், “கடந்த வியாழக்கிழமை அன்று, பாட்னாவில் இருந்து வந்த ரயில் கியூலை அடைந்தபோது, சில பயணிகள் மாலை 5.24 மணியளவில் ஒரு பெட்டியில் இருந்து புகை வருவதைக் கண்டனர்.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது மற்ற ரயில்களுக்கு தீ பரவாமல் தடுக்க ரயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டு முன்னோக்கி நகர்த்தப்பட்டது. பின்னர், இரவு 7.45 மணிக்கு அந்த ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது” என்றார்.

இந்நிலையில் ரயிலை பயணிகள் தள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, பலரும் பல்வேறு கருத்துகளை நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours