போக்சோ குற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவுக்கு, மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 53 வயது தாயார், கடந்த மார்ச் 14 அன்று இது தொடர்பாக, சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் ஐபிசி பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் எடியூரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தனது புகாரில், “பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தனது மகளுக்கு நீதி கிடைக்க எடியூரப்பாவின் உதவியை நாட அவரது வீட்டிற்கு சென்றோம்.
அப்போது எங்களது குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா, பின்னர் எனது மகளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததார்” என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு, பின்னர் சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து எடியூரப்பாவின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் சம்மன் அனுப்பப்பட்ட சில மணி நேரங்களிலேயே எடியூரப்பா, இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
+ There are no comments
Add yours