புதுச்சேரியில் விஷவாயு கசிவு.. சிறுமி உட்பட 3 பேர் பலி !

Spread the love

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் 15 வயது சிறுமி.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியின் தெருக்களில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு வீட்டின் கழிவறையில் இருந்து வெளியேறியுள்ளது. விஷவாயு தாக்கியதில், அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்ற மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரைக் காப்பாற்றச் சென்ற மகளும் மயங்கி விழுந்துள்ளார். இருவருமே உயிரிழந்தனர். உயிரிழந்த மூதாட்டியின் பெயர் செந்தாமரை. அவருக்கு வயது 72. அவரை காப்பற்றச் சென்று உயிரிழந்த அவரின் மகள் பெயர் காமாட்சி என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இதேபோல் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் 15 வயது சிறுமியும் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சிறுமியின் பெயர் பாக்கியலட்சுமி. விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர் அவதிக்குள்ளாகியுள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரெட்டியார்பாளையத்தில் காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வரும்போதே விஷவாயு தாக்கம் உணரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியேற்றம்: உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து காவல்துறை அப்பகுதியில் வாழும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் புதுநகர் பகுதியில் ஆய்வு நடத்தி, பாதாள சாக்கடையை திறந்து வருகின்றனர். விஷவாயுவின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours